அதி உயர் மின்னலுத்தங்கள் காணப்படும் இடங்களில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி மொஹமட் அஸ்ரப் சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேடமாக தங்கூசி என்ற நூலினைப் பயன்படுத்தி பட்டங்கள் விடும் போது, பட்டங்கள் மின்மாற்றி அல்லது மின்கம்பங்களால் சிக்குவதுடன் இதன்மூலம் மின்சாரத் தாக்குதலுக்கு சிறுவர்கள் உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பெற்றோர் தமது குழந்தைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், விசேடமாக தமது குழந்தைகள் பட்டம் விடும் சந்தர்ப்பங்களில் மிகுந்த அவதானம் செலுத்தினால் சிறுவர்களின் திடீர் மரணங்களை தவிர்க்கலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.