Breaking
Sun. Dec 22nd, 2024

உலகளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 800 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது .

இது தொடர்பில் தமது அறிக்கையினை நேற்று ntspapl;Ls;s ஐ.நா அமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது,
 கணக்கிடப்பட்ட இம்மக்களின் தொகை சரியாக 795 மில்லியன் அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 09 பேருக்கும் ஒருவர் வீதம் என உலகளாவிய ரீதியில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்.
உலகின் மக்கள் தொகை பெருகி, மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டாலும், பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
 இந்த ஆண்டின் இறுதிக்குள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைவதில் பெரும்பாலான நாடுகள் வெற்றி கண்டுள்ளன. இவ்வகையில் 129 நாடுகளில் சுமார் 72 நாடுகள் அடைய வேண்டிய தமது இலக்கை அடைந்துள்ளன.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஊட்டச்சத்து குறைவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ஆரோக்கியமான சுகாதார வாழ்விற்கு ஏற்ற உணவினை கொண்டிராதவர்களே பட்டினியால் வாடுபவர்கள் என்ற கருத்தின் கீழ் கருதப்பட்டனர். அவ்வகையில் 12.9 சதவீதமானோர் கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் இந்த அமைப்பின் பொதுப்பணிப்பாளர் ஜோஸ் கிராஸினோ டி சில்வா இது பற்றி கருத்து தெரிவிக்கையில் இனிவரும் காலங்களில் பட்டினியால் வாடும் தொகை முற்றாக ஒ​ழிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தில் மக்கள் அபிவிருத்தியும் நிலையான  அபிவிருத்தி கொள்கைகளையும் பேணும் வகையில் இந்த திட்டம் அனைத்து அபிவிருத்தியடைந்து வரும் பிரதேசங்களிலும் செயற்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தினை அதிகளவில் வறிய மக்கள் வாழும் பிரதேசங்களிலும், அபிவிருத்தியடைந்து வரும் பிரதேசங்களிலும் கிராமப்புறங்களிலும் ஆரம்பிக்க நாம் தயாராகவுள்ளோம் என சர்வதேச உணவு அபிவிருத்தி ஏஜென்சியின்  தலைவர் கனஜோ எப். நவான்ஸ் தெரிவித்துள்ளார்.
பட்டினியிலிருந்து மக்களை விடுவிப்பது தொடர்பில் கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகள் ஆகியவை வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன. எனினும் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள பகுதியிலேயே இன்னும் உலகளவில் பட்டினியின் தாக்கம் அதிகமாக உள்ளது என ஐ .நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post