இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களிடமிருந்து தமக்கு பணம் வருவது நிரூபிக்கப்பட்டால் தாம் பொது வாழ்வில் இருந்தே விலகி விடுவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரும் நிறுவனங்கள் தமக்கு பணம் கொடுத்து, அவர்களின் நலனுக்காக தம்மை நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த சொல்வதும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் தாம் பொது வாழ்க்கையில் இருந்தே விலகி விடுவதாக ஹசாரே கூறியுள்ளார். அவரது சொந்த கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர், தமது போராட்டத்துக்கு அதரவு தருபவர்களிடம் இருந்து நிதி வசூலிக்கப்படுகிறது என்றும், அந்த ஒவ்வொரு ரூபாய்க்கும் தம்மிடம் சரியான கணக்கு இருக்கிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு ஹசாரே எதிர்ப்புத் தெரிவித்து வருவதுக் குறிப்பிடத் தக்கது.