Breaking
Thu. Nov 14th, 2024

மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு தொழி­லுக்கு செல்லும் பணிப்­பெண்­களின் பயிற்சிக் காலம் 40 நாட்கள் வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள வெளி­நாட்­டுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்லும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் பயிற்­சியின் ஆரோக்­கி­யத்­தன்மை மற்றும் அதன் கால அளவு தொடர்­பாக ஆராய்ந்து இந்த தீர்­மா­னத்தை எடுத்­த­தாக பணி­ய­கத்தின் ஊட­கப்­பேச்­சாளர் உபுல் தேஷப்­பி­ரிய தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,

இது­வரை காலமும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு செல்­ப­வர்­க­ளுக்­காக 21 நாட்கள் வழங்­கப்­பட்ட பயிற்­சிக்­காலம் 40 நாட்கள் வரை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு செல்­ப­வர்கள் கட்­டாயம் இந்த 40 நாட்கள் பயிற்­சியை பெற்­றி­ருக்க வேண்டும். அத்­துடன் தேசிய தொழில் திறன் சான்­றி­தழும் வைத்­தி­ருக்­க ­வேண்டும்.

மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு செல்லும் பெண்கள் தொடர்­பாக பணி­ய­கத்­துக்கு நீண்­ட­கால அவ­தானம் இருப்­ப­துடன் மத்­திய கிழக்கு நாடுகள் எதிர்­பார்க்கும் வீட்டுப் பணிப்பெண் பயிற்சி உட்­பட திறமை தொடர்­பாக கூடு­த­லான அனு­ப­வமும் இருக்­கின்­றது.

அதே­போன்று மத்­திய கிழக்கு நாடு­களில் தொழி­லுக்­காக எதிர்­பார்க்கும் எமது நாட்டுப் பெண்கள் ஆரோக்­கியம் மற்றும் போது­மா­ன­ளவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதனால் அந்த நாடுகள் எதிர்­பார்க்கும் தேவை­களை பூர்த்­தி­செய்­வ­தற்கு முடி­யு­மாக இருக்­கின்­றது.

இதற்கு முன்பு வழங்­கப்­பட்ட 21 நாட்கள் பயிற்­சியின் மூலம் எதிர்­பார்த்த இலக்கை நோக்கி நெருங்க முடி­யு­மா­க இருந்தது. அதனை மேலும் போது­மா­ன­ளவு வரை பெற்­றுக்­கொள்­வ­தற்கு தேவை ஏற்­பட்­டுள்­ளது. அது மத்­திய கிழக்கு பகு­தி­களில் தொழி­லா­ளர்­களை பெற்றுக் கொள்ளும் நாடு­களின் எதிர்­பார்ப்­பு­மாகும். 21 நாட்கள் பயிற்­சியின் போது தொழில் திறன், திற­மையை அதி­க­ரித்தல், தொடர்­பாடல் இய­லுமை, தொழில் புரியும் இடத்தில் ஏற்­படும் சவால்­க­ளுக்கு முகம் கொடுத்தல் மற்றும் நிதி முகா­மைத்­துவம் உட்­பட பல விட­யங்­க­ளுக்கு இங்கு பயிற்சி வழங்­கப்­ப­டு­கின்­றது. 40 நாட்கள் பயிற்சியின் போது இந்த விடயங்களை மேலும் ஆரோக்கியமாகவும் போதுமானளவு அதிகரித்தும் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் தேசிய தொழில் திறன் எனும் NVQ சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

By

Related Post