சம்மாந்துறை, பணிமனையில் இடம் பெற்றபொது மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும், லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி S.M.M.இஸ்மாயில் அவர்கள் பொதுமக்களுடனான கலந்துரையாடலின்போது பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்தார். இதன் அடிப்படையில் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்ளுக்கு. அவர்களது தொழில் துறையினைக்கு ஏற்றவகையில் அவர்களது தொழில் துறையினை முன்னேற்றும் நோக்கில் எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவுவதாகவும் கூறி இருந்தார்.
இதன் அடிப்படையில் அங்கு சமூகமளித்த முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள் யாவரும் கலாநிதி S.M.M.இஸ்மாயில் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அங்கத்தவ படிவத்தினையும் பெற்றதுடன். இந்நிகழ்வின்போது IDB யின் சம்மந்துறைக்கான இணைப்பாளரான M.M.நௌஷாத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார் . பொதுமக்கள் சந்திப்பின்போது மக்கள் மனுக்களை கலாநிதி S.M.M.இஸ்மாயில் அவர்களிடம் கையளித்ததுடன். குறிப்பிட்ட மனுக்களுக்கான தீர்வினை வெகுவிரைவில் பெற்றுதருவதாக. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும , லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்கள் கூறினார்.