புத்தளம் நகர சபையின் சுகாதார பரிசோதகர் தாக்கப்பட்டதை தொடர்ந்து நகர சபை ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்தார்கள்.
இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் பிரதி தலைவருமான M.H.M நவவி அவர்களுக்கும் நகர சபை செயலாளர் , ,பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நகர சபை கட்டிடத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதிலே குற்றவாளிகளை தாம் எப்படியும் கைது செய்து பாதிக்கப்பட்டவருக்கு நீதியை வழங்குவோம் என்றும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதன் போது தங்கள் தரப்பு நியாயங்களையும் தங்களது பணி பகிஷ்கரிப்பு பற்றியும் நகர சபை செயலாளர் தெரிவித்ததோடு இன்றோடு பணி பகிஷ்கரிப்பை நிறைவு செய்வதாகவும் , இப்போது முதல் நகர சபை பணிகள் இடம்பெறும் என்றும் கூறினார்.