Breaking
Tue. Dec 24th, 2024

பண்டிகளைக்காலத்தில் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப் பாடு ஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொருட்களின் விலைகளை வேண்டுமென்று அதிகரித்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நாடுமுழுவதிலும் திடீர் சுற்றுவளைப்புக்களை மேற்கொண்டு சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை சந்தையில் அரிசி விநியோகத்தை தாராளமாக்கி விலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்ச்சரவைக்கு முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

By

Related Post