Breaking
Mon. Dec 23rd, 2024

முஸ்லிம்களின் பாரம்பரிய  தொழில் “வர்த்தகம்” என்பதால் அந்த மக்களின் தொழிலை முன்னேற்றம் செய்ய, வர்த்தக அமைச்சை எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளாத போது, இந்த நாட்டின் வர்த்தகர்கள் முன்னேற்றம் அடைய  வேண்டும், நாடு வர்த்தகம் மூலம் பொருளாதார அபிவிருத்தியடைய வேண்டும் என்ற கொள்கையுடன், பலரின் வேண்டுகோளுக்கிணங்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுப் பதவியை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்றுக்கொண்டார். அதனால், வர்த்தகர்கள் இன்று பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்

அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து வர்த்தக அமைச்சராக இருந்துகொண்டு, அந்த அமைச்சு மூலம் சமூகத்துக்கு என்ன செய்கிறார் என்று சிந்தனையற்ற சில அரசியல்வாதிகள் கேட்கின்றனர்

இந்த நாட்டு வியாபாரிகளின் வளர்ச்சியால் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை பெற்றுகொள்ள காலடியில் சதொசா வர்த்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல ஆயிரம்  இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அத்தோடு, கைத்தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வசதியற்ற குடும்பங்களுக்கு அடிக்கடி வாழ்வாதார உதவிகள், வீடு இல்லா மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தல், இப்படி அமைச்சுக்கு சம்மந்தம் இல்லாத அபிவிருத்தி வேலைகளை தனது அரசியல் சாணக்கியத்தால் மக்களுக்கு செய்து கொடுத்துள்ளார்.

இவைகளை தெரிந்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அமைச்சர் ரிஷாட் என்ன செய்துள்ளார் என்று கேட்பவர்களை போன்று, தொழில் வழங்கும் அமைச்சை ஏற்றுக்கொண்டு, தொழிலை விற்று அரசியல் வியாபாரத்தை அமைச்சர் ரிஷாட் செய்யவில்லை என்பது மட்டும் உண்மை. அவர் செய்யவும் மாட்டார். தொழில் வாய்ப்புக்காக பணம் பெற்றார்கள் என்ற குற்றத்துக்காக ஒரு சிலரை தனது கட்சியிலிருந்து அமைச்சர் அவர்கள்  நீக்கியுள்ளார். இப்படியான ஊழல் மோசடி  அற்ற ஒரு அரசியல்வாதியை விமர்சனம் செய்பவர்கள் மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும்

அமைச்சர் ரிஷாட் நினைத்தால் நாளை வேறு அமைச்சை பெறலாம். அதனால், சமுதாயம் விரும்பும் வர்த்தக தொழில் செய்பவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஆனால், தற்போது இருக்கும் அமைச்சு மூலம் மக்களுக்கு தேவையான சகல விடயங்களையும் பல போராட்டத்துக்கு மத்தியில், அமைச்சர் ரிஷாட் நிறைவேற்றி வருவது, எதிரிகளுக்கு கோபமாக இருக்கிறது.

இன்று வடமாகாணத்துக்கு போனால் தெரியும் அமைச்சர் ரிஷாட், தனது அமைச்சுக்கு சம்பந்தமில்லாத அபிவிருத்திகளை மக்கள் நலனுக்காக செய்துள்ளார் அதை கண்ட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல அரசியல்வாதிகள் வியந்து பேசுகின்றனர். அதனால்தான் அமைச்சர் ரிஷாட் எந்த அமைச்சை கொடுத்தாலும் திறன்பட செய்வார் என்று, ஜனாதிபதி மன்னாரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்

வட மாகாணத்தில் பல அரசியல்வாதிகள் இருந்தாலும் அங்குள்ள மக்களின் வேதனை மனக்கவலையறிந்து ஜாதி பேதமின்றி இன்றும் சேவை செய்துகொண்டு இருக்கும் ஒரு அரசியல்வாதி என்றால் அது அமைச்சர் ரிஷாட் என்றுதான் கூற வேண்டும். அதற்கு ஆதாரமாக அங்குள்ள தமிழ் முஸ்லிம் மக்களிடையே கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். அதிலும் தமிழ் மக்களிடம் கேட்டால் நன்றாக இருக்கும்

வட மாகாணத்தில் தனது அரசியலை செய்த அமைச்சர் ரிஷாட், கிழக்கு மக்கள் ஏமாற்றுவாதிகளின் அரசியல் வலையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை என்பது, வட மாகாண மக்களின் நிலையை விட மோசமாக இருந்தது. அதனால் 2015 ஆம் ஆண்டு கிழக்கு மக்களின் வேண்டுகளுக்கிணங்க, ஏமாற்று அரசியல்வாதிகளிடமிருந்து அந்த மக்களை மீட்க, கிழக்கு நோக்கி வந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு, மக்களின் அமோக ஆதரவு கிடைத்தது. அதன்மூலம் இன்று வெற்றியும் கண்டு கிழக்கு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்துள்ளார். அத்தோடு  கிழக்கு மாகாணம் அபிவிருத்தியும் அடைந்து வருகின்றது.

இதை கண்டுகொள்ள முடியாதவர்கள் இறுதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சை விமர்சனம் செய்கின்றார்கள். “வேலையில்லாத நாசவன் பூனையை பிடித்து செரச்சானாம்” என்பது போல், எதிர்வரும் தேர்தலில் மக்களால் ஓரங்கட்டப்பட இருப்பவர்களுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனைப் பற்றி விமர்சனம் செய்யாமல் தூங்க முடியாத நிலை வந்துள்ளது. இதுதான் இன்றைய நிலை. இதற்கு கிழக்கு மக்கள்  எதிர்வரும் தேர்தலில் மயிலுக்கு வாக்கு போட்டு அவர்களுக்கு  பதில் சொல்ல மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.

-ஜெமீல் அகமட்-

Related Post