அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால் வரலாற்று பதிவை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல் எனவும் இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்கள் என்றும் இன்று (27) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.
இனி உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே ஜனாதிபதி மேலதிக அதிகாரங்கள் கிடைக்கும் என்றும் ஆனால் அதிகாரங்களை கூட்டிக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு அளிக்கும் என்று எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்றில் அறிவித்தார்.
எனினும் இன்னும் சில திருத்தங்கள் சேர்ப்புக்கள் இருப்பதாகவும் இன்று மாலை ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சருடன் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் அது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.