பெருந்தலைவர் அஷ்ரப் விட்டுச் சென்ற இடைவெளியை பூர்த்தி செய்ய ஒரு தலைவன் வருவானா? என ஏங்கிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சகல இன மக்களாலும் பட்டை தீட்டப்பட்டு கூராக்கப்பட்ட ஆயுதமே அமைச்சர் றிசாட் பதியுதீன்!
இரண்டாயிரத்துக்குப் பின்னரான இந்த பதினெட்டு வருடகாலத்தில் கழுத்தறுப்புக்கள் , காய்வெட்டுக்கள் அத்தனையும் கடந்து இன்று இந்த சமூகத்தின் ஒட்டு மொத்த பாரத்தையும் சுமக்கத்தயாரான, சுமக்கின்ற நிலையில் உள்ள ஆலவிருட்சமே றிசாட் பதியுதீன்!
வில்பத்து விவகாரம், பொது பலசேனா விவகாரம், நீதிமன்ற விவகாரம்,சக்தி ரங்கா விவகாரம், இன்னும் என்னவற்றிலெல்லாம் மாற்று சமூகம் அவரை மாட்டிவிட நினைத்ததோ அத்தனையில் இருந்தும் தனக்கே உரித்தான பாணியில் இறைவன் துணையோடு வெற்றிபெற்ற தலைவன் றிசாட் பதியுதீன்!
இத்தனையும் தாண்டியும் நிலையாக நிற்கும் ஒருவரை நிலைகுலையச்செய்யும் முயற்சியே டயஸ்போராக்களின் சதியும் கொலை முயற்சியும். அத்தனையில் இருந்தும் எமது சமூகம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. வெறுமெனே அவனும் இவனும் போடும் வீடியோ பதிவுகளில் உள்ளவையல்ல!
நமது சமூகத்தில் உள்ள பாரிய குறைபாடுதான் நல்லவற்றை நாட்சென்று ஏற்றுக்கொள்வது. அது வரைக்கும் செய்யவிடாது கொல்வது. இது நமது பிழையல்ல. நாம் பெற்று வந்த சாபம்!
பெருந்தலைவர் அஷ்ரப் உயிரோடு இருந்த காலத்தில் எட்டமுடியாத வெற்றியும் புகழ்மாலையும் அவரை இழந்த பின்னர் அனுதாபத்தின் பேரில் கட்சி பெற்றுக்கொண்டது. ஹக்கீம் அனுபவித்தார். ஆனால் வாக்களித்த பொதுமக்கள் கண்ட பலன் ஏதும் இல்லை!
இவ்வாறான தவறுகள் நமது சமூகத்தில் திருத்தப்படல் வேண்டும். நியாயம் அநியாயம் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எமக்கு வரவேண்டும். ஆட்டு மந்தைகள் போல் அள்ளுண்டு செல்லும் இழி நிலை நீங்க வேண்டும்!
கூர்மழுங்கி மொட்டான காட்போட் தலைமைகளை விடுத்து என்றும் குத்துவதற்கு தயாரான கூரிய முனை கொண்ட தலைவனின் பின்னால் ஒன்று திரள்வதன் ஊடாக மாத்திரமே எமது முஸ்லிம் சமூகம் தமது இருப்பினையும் அடையாளத்தினயும் தக்கவைக்கமுடியும் என்பதே காலம் நமக்குக் கற்றுத்தந்த பாடம்!
ஷிபான் BM
-மருதமுனை-