பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிவான் தேவிகா லிவேரா தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிவானாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிகழ்வும் இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேயகோனும் நிகழ்வில் பங்கேற்றி ருந்தார்.