Breaking
Mon. Dec 23rd, 2024

பதிவு செய்யப்படாமல் உள்ள கைத்தொலைபேசி மற்றும் தொலைபேசி உபகரணங்கள் விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாதத்தின் இறுதியில் நாடளாவிய ரீதியில் குறித்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தக நிலையங்களை பதிவு செய்வதற்கு 3 மாதம் கால எல்லை வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல வர்த்தக நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுவரை பதிவு செய்யப்படாத நிலையங்கள் மிக விரைவில் இந்த நாட்களுக்குள் பதிவு செய்யுமாறும் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, பதிவுசெய்யபடாத நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post