பதுளையில் மீண்டும் பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது காலநிலையில் ஏற்பட்ட இம் மாற்றத்தில் மலையகப் பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிராகவும் காலை 89 மணி வரை பனி மூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக பதுளை மாவட்டத்தில் பதுளை, மஹியங்கனை, பண்டாரவளை, அப்புத்தளை, பெறகலை, ஹல்தும்முல்லை, வெலிமடை, பொறகஸ், ஹக்கலை, தியத்தலாவை, குருத்தலாவை, பூனாகலை , கொஸ்லந்தை , எல்ல, ரத்தம்ப போன்ற பிரதேசங்களில் கடும் பனிப் பொழிவு நிலவுகின்றது.
இப்பகுதியில் தேயிலை மலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் கை, கால்களில் வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். குழந்தை முதல் பெரியோர் வரை சளித் தொல்லை ஏற்பட்டு தினமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருவதாகவும் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை வெல்லவாய எல்ல வீதி, அப்புத்தளை பெறகலை வீதி ,வெலிமடைஹக்கல வீதி , மஹியங்கனைபதுளை வீதி போன்றவற்றில் பயணிப்போர் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இவ் வீதிகளில் பனி மூட்டம் அதிகரித்து வருவதால் இரவு நேரங்களில் பயணிப்போர் வாகனங்களில் மஞ்சள் நிற விளக்குகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
-Thinakural-