Breaking
Mon. Dec 23rd, 2024

2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

குறித்த நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும், ஊடக ஒடுக்கு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (Reporters Without Borders – RSF) இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

கடந்த வருடத்தில் இப்பட்டியலில் 165 ஆவது இடத்தினை வகித்த எமது நாடு இவ்வாண்டில்141 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளமை விசேட அம்சமாகும்.  மேலும் கடந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி முறைமையானது இம்முன்னேற்றத்திற்கு பாரிய அளவில் வித்திட்டது என்றால் மிகையாகாது. இவ் நல்லாட்சியின் கீழ் நல்லாட்சி அரசினால் ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பட்டியலில் பின்லாந்து, அதிக பத்திரிக்கை சுதந்திரமிக்க நாடாக, தொடர்ந்து 6 ஆவது முறையாகவும்முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நெதர்லாந்து, நோர்வே மற்றும் டென்மார்க்ஆகிய நாடுகள்முறையே 2,3 மற்றும் 4 ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. 180 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் ஆகக்குறைந்த பத்திரிக்கை சுதந்திரமுள்ள நாடாக, கடைசி இடத்தைப் பிடித்துள்ளது எரித்ரியா.

எமது நற்பு நாடான இந்தியா 133 ஆவது இடத்திலும்அமெரிக்கா 44 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post