Breaking
Mon. Dec 23rd, 2024

பதுறுக் காக்கா
பாயில் சாய்ந்து
பத்ர் யுத்தத்தின்
பயானைக் கேட்பார்.

படைகளைப் பற்றி
பயானில் சொல்ல
கடைகளின் விளம்பரம்
இடையில் குறுக்கிடும்.

சீலை விளம்பரம்
சென்று முடிய
ஏழை சஹாபிகளின்
இன்னல் தொடரும்.

அல்லாஹ்வுக் ‘கஞ்சி’
அவர்களின் யுத்தம்…
அப் பயான் தொடர-

பள்ளிக் ‘கஞ்சி’
பச்ச இஞ்சி கூட
பதுறுக் காக்கா
மெதுவாய்க் கூறுவார்.

பதுறு மெளலூதின்
பாடல் வரிகள்
புதிய மெட்டில்
போகும் பயானில்.

பதுறுக் காக்கா
பக்குவமாய் எழுந்து
அடக்கத்துடனே
ஆமீன் சொல்வார்.

வலீதை அலி (ரழி)
வலிமையாய் தாக்கினார்
வரலாறு தொடர-

இதற்கு அனுசரணை
இந்த ட்ரவல்ஸ்தான்
இடையில் சொல்ல-

பதுறுக் காக்கா
பாதி குழம்பி
அலி (ரழி) தாக்க
அனுசரணை கொடுத்ததாய்
விளங்கிக் கொண்டே
விளாங்காயை வழிப்பார்.

இறுதியில் சத்தியம்
எப்படி வென்றது
பொறுமையாய் கேட்டவர்-

பொஞ்சாதியை நோக்கி
கல்யாணம் முடிக்கக்க
கடையொன்று தருவதாய்
உண்ட வாப்பா
ஒரு தரம் சொன்னார்.

இன்னும் அதனை
எழுதித் தராததால்
இப்ப கோட்டில்
இருக்கிற வழக்கில்
எப்படியும் வெற்றி
எனக்கே கிடைக்கும்
அதைத்தான் ஹஸ்ரத்
அழகாய்ச் சொன்னார்
இறுதியில் சத்தியம்
எப்படியும் ஜெயிக்கும்.

சொன்ன காக்கா
சுறுக்காய் எழுந்தாய்
இன்னிக்கு தறாவீஹ்க்கு
எப்படியும் போகனும்
பதுறு மெளலூது
பாடிய பின்னால்
இனிப்புக் கஞ்சும்
இன்னும் பலதும்
சுவையாய்த் தருவார்
சுறுக்கா எழுந்தார்.

பதுறுக் காக்காவாய்
பலபேர் நம்மில்

By

Related Post