Breaking
Thu. Nov 14th, 2024
பனாமா நாட்டை தளமாக கொண்ட மொஸாக் ஃபொன்செக என்ற சட்ட நிறுவனத்தின் கசிந்துள்ள ஆவணங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சீஷெல்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையால் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், பணப்பரிமாற்றச் சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் சுமார் 11 நாட்டுத் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் 128 அரசியல்வாதிகளுக்கு தொடர்புகள் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளன. இந்நிலையிலேயே ஆவணக்கசிவில் இலங்கை சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும்  கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தொடர்புபட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

By

Related Post