Breaking
Mon. Dec 23rd, 2024

பனாமா ஆவணங்களில் வௌியிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ட்ரான்ஸ்பரன்ஸி இன்டநெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, சர்ச்சைக்குரிய பனாமாவின் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில் பணப் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் அண்மையில் தகவல் வௌியிடப்பட்டு சர்சையை ஏற்படுத்தியது.

இதில், இலங்கையுடன் தொடர்புடைய மூன்று வௌிநாட்டு நிறுவனங்கள், 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் 53 ஆவணங்கள் பற்றிய தகவல்களும் வௌியிடப்பட்டன.

எதுஎவ்வாறு இருப்பினும் குறித்த பணம் சேமிக்கப்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வது குறித்து தற்போது போதுமான தகவல்கள் இல்லை என, ட்ரான்ஸ்பரன்ஸி இன்டநெசனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சட்டத்தரணி ஜே.சீ.வெலிஅமுண குறிப்பிட்டுள்ளார்.

அந்தந்த நபர்கள் செய்த தவறுக்கு அமைய தண்டனையும் வழங்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post