Breaking
Mon. Dec 23rd, 2024

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டிற்கு அமையவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

29 வயதான மொஹமட் சகீம் சுலைமான் என்பவர் நேற்றிரவு வெளியில் சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், குறித்த நபரின் குடியிருப்புக்கு வெளியில் இருந்து கை கடிகாரம் மற்றும் இரத்த மாதிரிகளை மீட்டுள்ளனர்.

By

Related Post