Breaking
Mon. Dec 23rd, 2024

இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 15ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது.

சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை பெயர், ஊர் விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post