Breaking
Mon. Dec 23rd, 2024
குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பல தேர்தல் தொகுதி பம்மன்ன அகார கொலனி மக்கள் சந்திப்பும் கட்சியின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான நஸீர் தலைமையில், பம்மன்ன அகார பள்ளி மக்தப் கட்டிடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, வட்டாரக் கிளை அமைக்கப்பட்டதுடன், கிராமத்தின் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஊர் மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பம்மன கிளை சங்கத் தலைவர் நஸ்மிரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித் தவிசாளர் எம்.சி. இர்பான், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Post