துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல், ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்திலும் இம்மாதிரியான தாக்குதல் நடந்திருக்கலாம் ஆகையால் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசுகளும் கூட்டாக இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் நேடோ உறுப்பு நாடான துருக்கிக்கு ஆதரவு அளிப்பதில் அமெரிக்கா உறுதியாக நின்றது என தெரிவித்துள்ளார்.
ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கி மூன், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன், இந்த தாக்குதல் ஒரு கொடூரச் செயல் என கூறியுள்ளார்.