நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றொரு புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஜுவான் மெண்டஸ் இடம் அரசாங்கம் இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளது.
குறித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திட்டமிட்ட குற்றங்களைத் தடுத்தல், விசாரணைகளுக்கான சட்ட அமைப்புகள், மற்றும் புலனாய்வுப்பிரிவு என்று மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்படவுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப்பதிலாக புதிய சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் விரைவில் நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு என்பனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.