Breaking
Fri. Nov 22nd, 2024
-விடிவெள்ளி ARA.Fareel-
பொது­ப­ல­சேனா அமைப் பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரும் மியன்­மாரின் அசின் விராது தேரரும் செய்து கொண்­டுள்ள உடன்­ப­டிக்கை உட­ன­டி­யாக  நாட்­டுக்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
இரு நாடு­க­ளிலும் தற்­போது நடை­பெற்று வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான  நட­வ­டிக்­கை­களை அதி­க­ரிப்­ப­தற்கும் பள்­ளி­வா­சல்­களை அழிப்­ப­தற்கும் இரு­வரும் உடன்­பட்டு உடன்­ப­டிக்கை செய்து கொண்­டுள்­ள­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது என ஜாதி­க­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லா­ளரும் மஹி­யங்­கனை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்­துள்ளார்.
வட்­ட­ரக்க விஜித தேரர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யிலே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். குறிப்­பிட்ட அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘மியன்­மாரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களில் ஈடு­படும் விராது தேரரும் இலங்கை முஸ்லிம் எதிர் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் ஞான­சார தேரரும் இணைந்து தமது செயற்­பா­டு­களைத் தீவி­ரப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.
இந்த உடன்­ப­டிக்கை அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென நான் சவால்­வி­டுக்­கிறேன். இரு நாடு­களின் முஸ்லிம் விரோத குழுக்­களை பரி­மாறிக் கொள்­ளவும் இவர்கள் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார்கள்.
ஞான­சார தேரரின்  மியன்மார் விஜ­யத்தை கொண்­டா­டு­வ­தற்கு அசின் விராது தேரரின் கும்பல் அங்கு பள்­ளி­வா­சல்கள் சில­வற்றை தீக்­க­ரை­யாக்­கி­யது. மஹி­யங்­க­னையில் ஆரம்­பிக்­கப்­பட்ட அல்­லாஹ்­வையும் நபிகள் நாய­கத்­தையும் அவ­ம­திப்பது தொட­ராக நடை­பெற்று வரு­கி­றது.
மதத்­தையும் மதத்­த­லை­வர்­க­ளையும் கட­வு­ளையும் நிந்­திப்­பதை எந்­தவோர் மதத்­த­வரும் ஏற்றுக் கொள்­ள­மாட்­டார்கள். மக்­களின் மனதில் குரோ­தங்­களை உரு­வாக்கி நாட்டை அழி­வுப்­பா­தையில் இட்டுச் செல்ல ஒரு சில அமைப்­புகள் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கின்­றன. இனங்­க­ளுக்­கி­டையில் கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன.
அவ்­வா­றான அமைப்­புகள் தமக்கு நிதி­யு­தவி வழங்கும் அமைப்­பு­களின்  செயற்­திட்­டங்­களை அரங்­கேற்­று­கின்­றன. அதனால் சமா­தா­னத்தை விரும்பும் மக்கள் இது விட­யத்தில் மிகவும் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.
பௌத்த சாச­னத்­துக்கு பல சவால்கள் ஏற்­பட்­டுள்­ளன. பொரு­ளா­தார ரீதி­யிலும் பெளத்­தர்கள் பின்­ன­டை­வு­களைச் சந்­தித்­து­வ­ரு­கி­றார்கள். இச்­சந்­தர்ப்­பத்தில் பௌத்­தர்­களின் பொரு­ளா­தா­ரத்தை ஸ்திரப்­ப­டுத்­து­வ­தற்கும் பௌத்த சாச­னத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வுமே பௌத்த குரு­மார்கள் பாடு­பட வேண்டும்.
அதை­வி­டுத்து முஸ்லிம் எதிர்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து தீவி­ர­வாத செயல்­களில் ஈடு­ப­டு­வதால் பௌத்­தர்கள் மேலும் அபாய நிலைக்கு தள்­ளப்­ப­டு­வார்கள்.
இந்தச் சிறிய நாட்டு மக்கள் நல்­லி­ணக்­கத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்கு உறு­தி­பூ­ணு­மாறும் நாட்டை அழிக்கும் அமைப்­பு­களின் உற­வு­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­மாறும் வேண்டிக் கொள்­கிறேன். பௌத்­தத்தின் பெயரைப் பாவித்து பௌத்­தர்­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தாகக் கூறிக் கொண்டு இலங்­கையில் முஸ்லிம் எதிர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டாலும் மியன்­மாரில் மேற்­கொண்­டாலும் அது மிகவும் ஆபத்­தா­னது.
இலங்­கையில் தற்­போது மீண்டும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­டு­வ­துடன் தாக்­கப்­பட்டும் வரு­கின்­றன. மஹி­யங்­கனை, மொன­ரா­கலை, கண்டி, தெஹி­வளை மற்றும் அம்­பிட்­டிய பகு­தி­களில் பௌத்த பெயர்­களில் முன்­நிற்கும் குழு­வினர் பள்ளிவாசல்களைத் தாக்கியிருக்கின்றனர்.
எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு ஆபத்துக்கள் ஏழாதிருக்க அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை  உருவாக்க அரசு துரிதமாக செயற்பட வேண்டும்.
இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்குவதற்கு சூழ்ச்சி செய்யும் பொதுபலசேனா அமைப்பு மியன்மாரில் கையொப்பமிட்ட உடன்படிக்கையை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post