பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து முன்நிறுத்தப்பட்டு அதிக பட்ச தண்டணைகள் வழங்கப்பட வேண்டும் மாறாக முஸ்லீம் சமூகம் மீதும் அமைச்சர் ரிசாத் மீதும் வீண் பழி சுமத்தி அபாண்டத்தை அள்ளிப் போட முடியாது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரியாலயத்தில் (26) வெள்ளிக் கிழமை காலை இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடந்ந்தும் தெரிவிக்கையில் கடந்த வாரம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம், கடுவாபிடிய, மட்டக்களப்பு உட்பட கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களான சங்ரிலா, சினமன், கிங்ஸ்பெரி போன்ற இடங்களில் தொடர் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகளை கண்டு பிடித்து அதனுடன் சம்மந்தப்பட்டவர்களையும் கண்டறிந்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் இஸ்லாம் மார்க்கம் பயங்கரவாதத்தை அங்கீகரித்ததில்லை அதனுடன் தொடர்புபட்ட தற்கொலைதாரிகளின் ஜனாசாவாக ஏற்றுக்கொண்டு நல்லடக்கம் செய்யப்போவதில்லை இவ்வாறான தாக்குதல்களால் உலகத்தில் உள்ள முஸ்லீம்கள் மன வேதனை அடைகிறார்கள் இவர்களின் துக்க துயரங்களில் நான் உட்பட எமது கட்சியின் தலைமையும் பங்கு கொள்கிறோம் . முஸ்லீம் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுடைய வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எமது கிறிஸ்தவ மக்களுடன் ஒன்று சேர்ந்து கடைகள் அடைக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கங்களில் பங்கு கொள்கிறோம் சிலர் முஸ்லீம் தலைமைகள் மீது அபாண்டத்தை சுமத்தி கீழ்த்தரமான அரசியல் செய்ய விரும்புகிறார்கள் எமது தலைமை றிசாத் முஸ்லீம் சமூகம் அன்று அகதிகளாக்கப்பட்டபோது முப்பது வருட அகதிகளாக வாழ்ந்து வெரும் சொப்பிங் பேக்குடன் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள் அதன் பிறகே சிறந்த கல்வியின் ஊடாக அரசியல் தலைமையாக மாற்றம் பெற்றவர் பயங்கரவாதத்தை எந்தச் சமூகமும் வரவேற்க முடியாது மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலன் போன்றவர்கள் பழி சுமத்தி திசை திருப்ப முனைகிறார்கள் .
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பது ஒரு இனவாத கட்சி அல்ல மாறாக தமிழ் சிங்கள முஸ்லீம் கிறிஸ்தவ சமூகத்த்தையும் இணைத்து பயணிக்கின்ற கட்சி வட புலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு சபைகளை உள்ளூராட்சி மன்றிலும் வன்னியில் மாகாண சபையின் உறுப்பினராக சிங்கள மகனையும் கொண்டுள்ளோம் .
விமல்வீரவம்ச போன்ற இனவாதிகள் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார் இவரை மஹிந்த ராஜபக்ச கோதாபாய போன்றவர்களால் சட்டத்தின் முன் நிறுத்தி ஒதுக்கி வைக்க வேண்டும் நாட்டை துஷ்பிரயோகப்படுத்தியவர்கள் .
காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அரசியல் இலாபத்துக்காக முஸ்லீம் சமூகம் மீதும் எமது தலைவர் மீதும் அபாண்டத்தை சுமத்துவது முழு முல்லீம் சமூகம் மீதும் பழி சுமத்துவதைப் போன்றதாகும் . கிறிஸ்தவ சமூகத்தின் ஏக பிரதிநிதியாகவும் எதிர்காலத்தில் எவ்வாறான உதவிகளை செய்யமுடியுமோ அதனையும் செய்வதற்கு எமது தலைமை உட்பட நானும் உறுதி பூண்டு அவர்களின் துக்கங்களில் பங்கு கொள்கிறோம்
இதனால் மன வேதனை அடைந்து அவர்களின் இழப்புக்களிலும் பங்கு கொள்கிறோம் .
கடந்த கால முஸ்லீம் சமூகம் நாட்டின் சமாதானத்துக்காகவும் அமைதிக்காகவும் உழைத்தவர்கள் இதே நிலையை அடைய நாட்டின் அமைதியை நிலை நாட்டவும் ஒற்றுமையாக வாழவும் முழு மூச்சாய் நின்று செயற்படுவோம் என்றார்.