Breaking
Mon. Mar 17th, 2025

முன்னர் இந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் மிக ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர்கள்.
அவர்கள் மக்கள் பணத்தையும் சேர்த்து செலவு செய்தார்கள், அவர்களின் பிள்ளைகள் அணியும் பாதணிகளின் பெறுமதி 3 இலட்சத்தை கடந்தது.

அவ்வாறானவர்கள் பயன்படுத்திய இடுப்பு பட்டியின் விலை 1 இலட்சத்திற்கும் அதிகமானதாகும். இப்படியிருக்கும் போது பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட பல்லேவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்ற சாதாரண ஒருவரை இந்நாட்டு ஜனாதிபதியாக நியமித்தது இந்நாட்டு மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சியாகும்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அவசியமான பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக தான் செல்லும் பயணத்தின் இடையில் தெஹிவளையில் இருந்த சாதாரண பாதணி கடை ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது சாதாரண ஒருவர் அணியும் பாதணி இரண்டினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.இதனை பிரச்சாரம் போன்று மேற்கொண்டு புகைபடம் எடுத்து ஊடகங்களில் அவர் பிரசுரிக்கவும் இல்லை.

எனினும் இப்புகைப்படம் அக்கடையில் தொழில் புரியும் ஊழியர் ஒருவரினால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட உதவி :  ரிபான் மௌசூப்

இடம்:   shoe shop in dehiwala

Related Post