Breaking
Thu. Nov 14th, 2024

சகோதர இனங்களுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ்வதன் மூலமே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கி உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பின்னர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

25 ஆண்டுகள் தென்னிலங்கை அகதி முகாம்களில் நாம் பட்ட கஷ்டங்கள் போதும். இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். சிறுசிறு பிரச்சினைகளுக்காக நமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது. அதேபோன்று மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தனிநபருடன், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இன்னுமொரு தனிநபர் முரண்பட்டு உருவாகும் தனிப்பட்ட பிரச்சினைகளை, இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளாக மாற்றி, இனங்களுக்கிடையிலான மோதலாக உருவாக இடமளிக்க வேண்டாம்.

ஆயுதம் தாங்கியோர் செய்த தவறுக்காக, தனது சகோதரத் தமிழினத்தை நோகடிக்காதீர்கள். வேற்றுமை உணர்வுகளை வேரோடு களைந்து, சமத்துவமாக வாழப் பழகிக்கொள்ளுங்கள். இறைவனுக்கு மாற்றமான காரியங்களில் ஈடுபடாதீர்கள். ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து இன ஐக்கியத்துக்கு வழிகோலுங்கள்.

இந்த சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், சட்டத்தரணி மில்ஹான், அமைச்சரின் இணைப்பதிகாரிகளான முனவ்வர், முஜாஹித் போன்றவர்களும் பங்கேற்றனர்.

12105721_571170499715666_2747484110703087539_n

By

Related Post