நாளை (23) நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்குத் (G.C.E. O.Level) தோன்றும் அனைத்து மாணவச் செல்வங்களும் அப்பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மனமார்ந்த ஆசிகள்.
காலத்தால் அழியாத செல்வம் கல்வியாகும். “எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்” என்பது முதுமொழி. கற்றவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்புண்டு. அதனால் தான் சான்றோர்கள் “கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார்கள்.
கல்வி, முறைசார்ந்த கல்வி; முறைசாராக்கல்வியென வகுக்கப்படுகின்றது. “மாந்தர் தம் கற்றனைத்தூரும் அறிவு” என்பது வள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறியாகும்.
1)அறிவியற்கல்வி, 2)சமுக அறிவியற்கல்வி, 3)அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவையாகும்.
கல்வியின் வேர் கசப்பாக இருந்தாலும் அதன் பழம் இனிப்பாகும் என்பது அறிவுடையோர் கூற்று. எனவே “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவப் பெருந்தகையின் அறிவுரைக்கேற்ப வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றியடைய முயற்சிப்போமாக!
எஸ்.சுபைர்தீன்.
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.