Breaking
Fri. Jan 10th, 2025
இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையையும் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் ஆகிய எம்.எஸ்.எஸ்அமீர் அலி தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் உயர்தர பரிட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடம் உலகத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, எமது நாட்டில் உரிய காலத்தில் மேற்படி பரீட்சைகள் இடம்பெறாமல் காலம் தாமதமாகி, மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டது.
இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரீட்சைக்கு முகம்கொடுக்க உள்ள மாணவச் செல்வங்கள், நடைபெற உள்ள பரிட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற்று, எமது நாட்டுக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் தமது பெற்றோர்களுக்கும் நற்பெயரை பெற்றுக்கொடுப்பதற்கு ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டுமென்று இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துவதோடு, பிரார்த்தனை செய்கிறேன்.
சுகாதார அமைச்சினால் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பரீட்சைகளில் பங்கு கொள்ளுமாறும் இச் சந்தர்ப்பத்தில் மாணவச் செல்வங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இன மக்களும், நடைபெறவுள்ள இரண்டு பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, எமது மாவட்டத்தை கல்வியின் பால் முன்னேறிய மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று இச் சந்தர்ப்பத்தில் பிரார்த்தித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Post