இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் போது, மாணவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த காலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில் குறைந்தளவு முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேற்பார்வையாளர்களாக புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிபர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும், அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பரீட்சை மண்டபங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்திவிட்டு கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்கள் அமைதியாக இருப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.