அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், குருநாகல் மாவட்டத்தின், தம்பதெனிய தேர்தல் தொகுதியில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி சம்பந்தமான கலந்துரையாடல், கிரி/பொல்கஹயாய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.
அத்துடன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதி தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்டக் கல்விப் பொருப்பாளர் றியாஸ் அzஸ்ஹரி, பொல்கஹயாய முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். அன்சார், கிரி/நூராணியா முஸ்லிம் மகாவித்தியாலய பிரதி அதிபர் எம்.ஐ.எம்.ரிஸ்வி மற்றும் பொல்கஹயாய வட்டார அமைப்பாளர் பெளஷான், பெந்தனிகொட வட்டார அமைப்பாளர் மபாஸ், நுகஹதெர வட்டார அமைப்பாளர் லதீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(ன)