Breaking
Wed. Jan 15th, 2025

நாடு முழுவதிலும் நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிளியு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் பரீட்சை நடவடிக்கையின் போது எந்தவித மோசடிகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியாக 2 ஆயிரத்து 870 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற பரீட்சையில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 585 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post