Breaking
Mon. Nov 18th, 2024

நம் உணவுப் பழக்கத்திலும் ஒன்றிவிட்ட பர்கர், பீட்சாக்களில் மாவில் கலக்கும் அதீத சர்க்கரை அதனுடன் குடிக்கும் குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரை என இவற்றை தொடர்ந்து உட்கொண்டாலே மூன்றே நாட்களில் நீரிழிவு நோய் வரும் ஆபத்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலிடெல்பியா நகரில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அமெரிக்க உணவுப் பழக்கங்களை மூன்றே நாட்களில் தொடர்ந்து கடைபிடித்தாலே நீரிழிவு நோய் வரும் என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக சிறப்பான உடல்நலம் கொண்ட 6 ஆண்களை ஒரு வாரத்துக்கு, 50 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 35 சதவிகிதம் கொழுப்பு மற்றும் 15 சதவிகிதம் புரதம் போன்றவற்றுடன் சேர்ந்த உணவு வகைகளை, ஒரு நாளில் 6000 கலோரிகளுக்கு கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இவர்களை உடற்பயிற்சி ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும் கூறியிருந்தனர். இந்த ஆண்கள் குறிப்பிடப்பட்ட அளவு கலோரிகள் கொண்ட உணவுக்காக அமெரிக்க உணவுகளான பீட்சா, பர்கர் போன்றவற்றை அன்றாட உணவாக எடுத்துக்கொண்டனர்.

இந்த காலகட்டத்தில் இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டதால் உடலின் குளுகோஸை செல்கள் உறிஞ்சாமல், இவை நேரடியாக ரத்தத்தில் கலப்பது உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைந்தது. இத்தனை வேகமாக நீரிழிவு நோய் ஏற்பட்டது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் தந்தது. இந்த மாற்றம், மூன்றே நாட்களில் ஏற்பட்டது.

இந்த முடிவைக் கொண்டு, வேகமாக நீரிழிவு நோய் ஏற்பட வழியிருந்தால், அதே வேகத்தில் அதை குணமாக்கவும் வாய்ப்பிருக்கும் என்ற நம்பிக்கையுடன் அதற்கான ஆய்வில் ஈடுபட உள்ளதாக இதன் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

Related Post