Breaking
Sun. Dec 22nd, 2024
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் தலை முக்காடை நீக்கும் வரை வேலை கிடையாது என நகைக் கடையில் இஸ்லாமிய பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.
2008ம் ஆண்டு குவைத்தில் இருந்து குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு அகதியாக வந்தவர் மோனா அல்பால்தி(25). அவர் நியூசிலாந்தில் அவான்டேல் பகுதியில் வசித்து வருகிறார். டிப்ளமோ படித்துள்ள அவர் நகைக்கடையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
நேர்காணலுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முக்காடு
இஸ்லாமிய பெண்ணான மோனா தலையில் முக்காடு அணிந்தபடி வேலைக்கான நேர்காணலுக்காக ஆக்லாந்தில் உள்ள ஸ்டூவர்டு டாசன்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அவரை பார்த்த கடை மேனேஜர் முக்காடை நீக்கும்வரை பணியை பற்றி பேச முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பயம்
முக்காடை நீக்குமாறு கூறியது எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது. ஏற்கனவே எனக்கு வேலை கொடுக்க மாட்டார்களோ என்ற பயத்தில் தான் அந்த கடைக்கு சென்றேன் என்கிறார் மோனா.
எந்த வேலை என்றாலும்
எந்த வேலையாக இருந்தாலும் செய்ய தயார். ஆனால் நான் தலையில் முக்காடு அணிந்தபடி தான் வேலை செய்வேன். முக்காடு என் அடையாளம், என் மதம், எனது கலாச்சாரத்தை நான் மதிக்கிறேன் என்று மோனா கூறுகிறார். இந்நிலையில் நடந்த சம்பவத்திற்காக மோனாவிடம் அந்த மேனேஜரை மன்னிப்பு கேட்க வைப்போம் என்று கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல் முறை அல்ல
இந்த நகைக்கடையில் முக்காடு அணிவதற்காக வேலை நிராகரிக்கப்பட்டுள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலைக்கான நேர்காணலுக்கு வந்த பாத்திமா முகமதி என்ற பெண் முக்காடு அணிந்திருந்ததால் அவருக்கு வேலை மறுக்கப்பட்டது

By

Related Post