Breaking
Sun. Dec 22nd, 2024

அஸ்ரப் ஏ சமத்

இன்று கொழும்பு வாழ் முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் கொழும்பில் நடாத்தும் பர்மா வாழ் முஸ்லீம்களது கொலை செய்யப்படுவதை கண்டன அமைதிப் பேரணியில் தமிழர்களாகிய நீங்களும் இணைந்து கொள்ளல் வேண்டும்.

நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் புங்குடுதீவு வித்தியாவின் அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக முன்னணித் தலைவர் மனோ கனேசன் கோரிக்கை விடுத்தார்.

வித்தியாவின் கொலையில் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் இணைந்து கண்டித்து அமைதிப் பேரணியில் இனைந்தது போன்று முஸ்லீம்கள் பர்மாவில் அநியாயமாகக் கொலைசெய்யப்படுவதையிட்டு இன்று கொழும்பு வாழ் முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் கொழும்பில் நடாத்தும் கண்டனத்திலும் தமிழர்களாகிய நீங்களும் இணைந்து கொள்ளல் வேண்டும்.

அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி. என மனோ கணேசன் அங்கு வருககை தந்த தமிழ் மக்களிடம் வேண்டிக் கொண்டார்.

இதே போன்று இன்னுமொரு சிங்களப் பெண்னுக்கு நடந்துவிட்டால் நாம் சிங்களவர்களுடனும் இணைந்து கொண்டு நமது எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றிணைதல் வேண்டும். இதுவே நமது மாணிட பண்பாகும். கடந்த காலத்தில் தான் இவ்வாறான கண்டனங்களை கலந்து கொள்ளாமால் நாம் பயந்து ஒதுங்கியிருந்தோம். இனி நாம் ஒருபோதும் அவ்வாறு இருக்கக் கூடாது.

தமிழர்களாகிய நாம் ஏனைய இனங்களான சிங்கள முஸ்லீம்களுக்கு ஏதும் அநீதிகள் நடைபெறும் போது அதனை தள்ளி நின்று வேடிக்கை பாத்துக்கொண்டிருக்காமல் அல்லது நமக்கு தேவையில்லாத விடயம் என்றிறாமல் அல்லது நமது தமிழ் இனம் இலலையே, என்று இனியும் சிந்திக்க வேணடாம்;. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் அது ஒரு பாரிய தாக்கத்தை இந்த நாட்டிலும் சர்வதேசத்தில் ஏற்படுத்தும்.

மேற்கண்டவாறு நேற்று பி.பகல் கொழும்பு தமிழ்சங்கத்தில் புங்குடுதீவு வித்தியாவின் கொழும்பு வாழ் மக்களின் கண்டனமும் நினைவஞ்சலிக் கூட்டடத்தில் ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கனேசன் உரையாற்றினார்.

இந் நிகழ்வில் வித்தியாவின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

இங்கு பெண்கள் மனித உரிமை காப்பாளர் நளினி ரட்ணராஜா, சிறிதுங்க ஜயசுரிய, மேல் மாகாணசபை உறுப்பினர் சன் குகவரதன், ரோயல் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் மா. கணபதிப்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேரசிரியர் சி. பத்தமநாதன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் வேலனை வேனியன் ஆகியோறும் இங்கு உரையாற்றினார்கள்.

Related Post