மௌலவி செய்யது அலி ஃபைஜி
பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதை உலகறியும் பர்மாவின் அராகான் பகுதி முஸ்லிம்களை பெரும்பாண்மையாக கொண்ட பகுதியாகும்
புத்தர்களின் உலக தலைமைபீடமாக உள்ள பர்மாவின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் பெருபாண்மையாக இருப்பதை பர்மாவை சார்ந்த புத்த தீவிரவாதிகள் விரும்பவில்லை
எதிர்காலத்தில் அராகான் பகுதி தனி இஸ்லாமிய குடியரசாக உருவாகி விடும் என்ற அச்சத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விட படுகிறது
தீவிரவாதிகளின் இந்த பயங்கரவாத தாக்குதலை உலகில் உள்ள மனிதாபிமானம் மிக்க அனைவர்களும் கண்டிக்கின்றன.ர் இதில் முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் அல்லாதவர்களின் நாடுகள் என்ற பாகுபாட்டிர்கு இடமில்லை!
முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போரை மறைமுகமாக நடத்திவரும் அமெரிக்காவும் பர்மாவில் நடை பெறும் வன்முறைகளை கடுமையாக கண்டித்திருக்கிறது.
மற்றொரு போஸ்னியாவாக பர்மா மாறி வருகிறது என தனது கவலையை அமெரிக்க தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் இஸ்லாமிய நாடுகளில் முக்கிய நாடாக உள்ள சவுதி அரேபியா இந்த விசயத்தில் கவனம் செலுத்த வில்லை என பலர்களும் விமர்ச்சிப்பதை நாம் பார்க்க முடிகிறது.
ஏமனிலும் சிரியாவிலும் சவுதி அரேபியா காட்டும் ஆறுவத்தை பர்மா முஸ்லிம்கள் விசயத்தில் காட்டவில்லை என்று பலர்களும் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்து உள்ளனர்.
செய்தி நிறுவனம் ஒன்றி தலைவராக உள்ள அதாவுல்லா நுர் என்பவர் குறிப்பிடும்போது:
இந்த பிரச்சனையை சவுதியின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்று இருக்கிறோம். இந்த விசயத்தில் சவுதி அரேபியா தலையிட்டு இதை உலகநாடுகளின் சபைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருப்தாக தெரிவித்துள்ள அதே நேரத்தில் இந்த விசயத்தில் சவுதியின் கண்டனம் இதுவரையிலும் பகிரங்கமாக பதிவு செய்ய படவில்லை என்றாலும் ராஜ்ய ரீதியாக சவுதி அரேபியா தன்னால் முடிந்த பணிகளை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடலில் தத்தளித்த பர்மா முஸ்லிம்களுக்கு மலைசியா மற்றும் இந்தோனிசியா ஆகிய நாடுகள் உதவியதை நாம் அறிவோம். சவுதியின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே அந்த நாடுகள் இந்தமுடிவுக்கு வந்ததாகவும் அதாவுல்லா நுர் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இந்தோனிசியாவின் வெளியுறவு துறை அமைச்சர் சவுதி மன்னர் சல்மானின் அழைப்பின் பெயரிலேயே சவுதி வந்து சவுதி மன்னர் சல்மானை சந்தித்ததின் பின்னணியிலும் பர்மா முஸ்லிம்களின் பிரச்சனையே இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றை விடவும் மேலாக சவுதி அரேபியா பர்மா முஸ்லிம்களுக்கு உதவியே வந்திருக்கிறது மன்னர் அப்துல்லாவின் காலத்திலும் தர்போதைய மன்னர் சல்மானின் காலத்திலும் அவர்களுக்காக அதிகமான பொருளாதார உதவிகளை சவுதி அரேபிய செய்து வந்திருக்கிறது.
இப்போதும் சுமார் மூன்று இலட்சம் பர்மா முஸ்லிம்களை சவுதிஅரேபியா சுமந்து கொண்டுதான் இருக்கிறது.
2012 ஆம் ஆண்டு அடைக்கலம் தேடிவந்த அந்த மக்களுக்கு சவுதியில் தங்குவதர்கும் பணியாற்றுவதர்கும் உரிய விசேச அனுமதியை வழங்கி அந்த மக்களை சவுதி அரேபியா இன்றும் பாதுகாத்து வருகிறது.
மக்கா மதினா ரியாத் தம்மாம் போன்ற பகுதிகளில் அந்த பர்மா முஸ்லிம் வாழ்ந்து வருகின்றனர்.
ராஜ்ய ரீதியாக சவுதி அரேபியா மட்டும் இன்றி அனைத்து முஸ்லிம்நாடுகளும் இந்த பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும் என்பது தான் நமது விருப்பம்
இறைவன் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் உள்ளங்களில் பர்மா முஸ்லிம்களின் மீது கருணையை உருவாக்குவானாக அதன் மூலம் அந்த மக்களின் இருண்ட வாழ்வில் விடியலை தோற்றுவிப்பானாக!