நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகவும் ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து போட்டியிடுவதைவிட, ஒன்றுபட்டு ஒரே அணியில் போட்டியிடுவதன் மூலம் பலமான சக்தியாக உருவெடுப்பதுடன் பொதுபல சேனாவையும் எதிர்கொள்ள முடியுமென வட்டரக்க விஜித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் உலமா சபை, முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாட உள்ளேன்.
சிறுபான்மையினரை சீண்ட பொதுபல சேனா இப்போது நாகப்பாம்பு வடிவத்தில் உருவேடுத்துள்ளது. இந்த விசம் நிறைந்த பாம்பு தலைது!க்காமலிருக்க வேண்டுமென்றால் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.