வடகொரியாவும், தென்கொரியாவும் தீராப்பகை நாடுகளாக உள்ளன.
இந்த நிலையில் வெகு அபூர்வ சம்பவமாக, பலத்த பாதுகாப்பு கொண்ட எல்லையை தாண்டி, வடகொரியா வீரர் ஒருவர் தென் கொரியாவுக்குள் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நுழைந்தார். அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை. அவர் மீது தென் கொரியா வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவும் இல்லை. அவர் எப்படி நுழைந்தார், எதற்காக நுழைந்தார் என்பது குறித்து தென் கொரியாவின் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தென் கொரியாவுக்குள் ஆயிரம் வடகொரியர்கள் நுழைந்தாலும், அவர்கள் சீனா வழியாக ஊடுருவுவதுதான் வழக்கம். இந்த நிலையில் வடகொரியாவின் வீரர் இரு கொரியாக்களையும் பிரிக்கிற டி.எம்.இசட். என்னும் படைகள் அகற்றிய பகுதி வழியாக ஊடுருவி இருப்பது தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.