ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தெற்கு பெத்லஹாமில் இருக்கும் நிலப்பகுதியே இஸ்ரேலினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலினால் கைப்பற் றப்படும் பலஸ்தீனத்தின் பாரிய நிலப்பகுதி இதுவென கருதப்படுகிறது.
கடந்த ஜன் மாதத்தில் மூன்று யுத இளைஞர்கள் குறித்த பகுதியில் கடத்திக் கொல் லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் இராணு வத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளுர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு எதிராக இராஜ தந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலஸ்தீன பிரதான அமைதிப் பேச்சுவார்த் தையாளர் சயெப் எரகத் வலியுறுத்திள்ளார். ‘பலஸ்தீன மக்கள் மீதும் அவர்களது ஆக்கிர மிப்பு நிலத்தின் மீதும் இஸ்ரேல் அரசு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது” என்று எரகத் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
‘காசாவில் எமது மக்களுக்கு எதிராக மேற் கொண்ட யுத்த நடவடிக்கை மற்றும் குற்றச் செயல்களுக்கும் மேற்குக் கரை மற்றும் கிழக்கு nஜரூசலத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய குடியேற்ற செயல்களுக்கும் எதிராக இஸ்ரேல் மீது சர்வதேச சமூகம் பதில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரையின் சிவில் விவகார நிர்வாகத் திற்கு பொறுப்பான இஸ்ரேல் இராணுவத் திணைக்களமே பலஸ்தீன நிலத்தை கையகப்படுத்தும் முடிவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் கொவோட் என்று அழைக் கப்படும் யு+தக் குடியேற்றம் அமைந்திருக்கும் குஸ் எட்சியோன் பகுதியின் நிலமே கைப்பற் றப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலின் குடி யேற்ற பகுதியை விரிவுபடுத்த வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.
குறித்த பகுதியில் இருக்கும் இஸ்ரேல் குடியேற்றவாசிகள் இஸ்ரேல் கையகப்படுத்திய நிலத்தில் புதிய குடியேற்றங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இந்த நிலப்பகுதியில் பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பல ஒலிவ் மரத் தோப்புகள் இருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலஸ்தீனம் தனது எதிர்கால தேசத்தின் நிலப் பகுதி என்று அழைக்கும் பகுதிகளில் நிலையான யு+தக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதே இஸ் ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அரசின் கொள்கையாக உள்ளது. எனினும் இஸ்ரேல் அரசின் இந்த செயலை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் சட்ட விரோதமாக கருதுகிறது.
‘இஸ்ரேலின் இன்றைய அறிவிப்பின் மூலம் அது ஒரே தேசம் என்ற தீர்வை திணிப்பதற்கு முயற்சிப்பது தெளிவாவதோடு பலஸ்தீனர்களின் இருப்பை முற்றாக இல்லாமல் செய்வதற்கு முயற்சிப்பது உறுதியாகிறது” என்று பலஸ்தீன நிர்வா கத்தின் அதிகாரி ஹனான் அஷ்ராபி குறிப் பிட்டார்.
இஸ்ரேலின் புதிய நில அபகரிப்பு காசா யுத்தத் திற்கு பின்னர் மேலும் மோதலையே அதிகரிக்கும் என்று பலஸ்தீன அதிகாரி ஒருவர் எச்சரித்துள் ளார். காசா மீது இஸ்ரேல் 50 தினங்கள் நடத் திய தாக்குதல்களில் 2,000 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 10,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். காசாவில் நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்து ஒருசில தினங்களிலேயே இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இஸ்ரேலின் நிலக் கையகப்படுத்தும் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். ‘இந்த முடிவு மேலும் ஸ்திரமற்ற நிலை யையே ஏற்படுத்தும். காசா யுத்தத்திற்கு பின்னர் நிலைமையை இன்னும் மோசமாக்கும்” என்று ஜனாதிபதியின் பேச்சாளர் அபு+ ரடைனா குறிப் பிட்டுள்ளார்.
‘பலஸ்தீனர்களுக்கு இரு தேச தீர்வை வழங்கும் பேச்சுவார்த்தைக்கு எதிரானதாக இது அமைந்திருக்கிறது” என்று அமெரிக்க இராஜhங்கத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட் டுள்ளார். ‘இஸ்ரேல் அரசு இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
இஸ்ரேல் அரசின் இந்த நில அபகரிப்பு மூலம் குறித்த பகுதியில் தற்போது யு+தக் கல்லூரி ஒன்றுக்கு அருகில் வாழும் 10 குடும்பங்களும் ஒரு நிரந்தர குடியேற்றமாக மாற்றப்படுகிறது என்று இஸ்ரேல் குடியேற்ற நடவடிக்கைக்கு எதிராக செயற்படும் ‘பீஸ் நவ்” குறிப்பிட்டுள்ளது.
‘இந்த பிரகடனத்தின் மூலம் 1980களில் இருந்த முன்னெப்போதும்போலன்றி அதன் நோக்கம் தெளிவாக தெரிவதோடு குஸ் எட்சியோன் மற்றும் பெத்லஹாம் பகுதிகளின் உண்மை நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்படுகிறது” என்று பீஸ் நவ் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜ{ன் மாதம் நடுப்பகுதியில் இருந்து பெத்லஹாமை சூழவுள்ள பகுதி உட்பட மேற்குக் கரை எங்கும் சுமார் 6,000 யு+த குடியேற்றவாசி களுக்கு 1,472க்கும் அதிகமான புதிய குடியேற்ற வீட்டுத் திட்டங்களை அறிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது.
1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தில் ஆக்கிரமித்த அனைத்து நிலப்பகுதியையும் இஸ் ரேல் தனது நிலப்பகுதியாக உள்வாங்க முயற்சித்து வருகிறது.
எனினும் இது சட்டவிரோத மானதென சர்வதேச சமூகம் கருதுகிறது.
பலஸ்தீன நிலப்பகுதியென கருதப்படும் மேற்குக் கரை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு nஜரூசலத்தில் வாழும் 2.4 மில்லியன் பலஸ் தீனர்களுடன் சுமார் 550,000 இஸ்ரேலியர்களும் வாழ்கின்றனர்.
இஸ்ரேல் தனது சட்டவிரோத குடியேற்றங்களை மலைகள், பலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களை சூழவே அமைத்துவருகிறது. இவ்வாறான திட்டமிட்ட சுற்றிவளைப்பு குடியேற் றங்கள் மூலம் பலஸ்தீன தேசம் ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியத்தை இல்லாமல் செய்வதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்து கின்றனர்.