Breaking
Fri. Mar 14th, 2025
எனது சிந்தனைப்படி யூத நாடு என்ற கருத்து பிழையானது. அது ஏன் தேவை என்பதை என்னால் விளங்க முடியவில்லை. அதனுடன் குறுகிய மனப்பான்மையும் பொருளாதாரத் தடைகளும் தொடர்புருகின்றன. அது தீமையானது என நான் நம்புகின்றேன். நான் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றேன்
.

யூத நாடொன்று அமைப்பதைவிட அரேபியர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய பொருத்தமான உடன்படிக்கைக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டுக்கான எல்லைகள், இராணுவம், தற்காலிக அதிகாரத்துக்கான ஏற்பாடு என்பவை எவ்வளவுதான் எளிமையானவையாக இருந்தாலும், யூத மதம் பற்றிய எனது அறிவைப் பொருத்தவரை யூத நாடு என்ற கருத்தை யூத மதம் எதிர்க்கின்றது. இதன் காரணமாக யூத மதம் சந்திக்கப்போகும் இழப்பு பற்றி நான் அச்சம் கொள்கின்றேன். ஐன்ஸ்டீனின் “Out of my later years” என்ற நூலிலிருந்து.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

Related Post