பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட காணியில் விடுவிக்கப்படாமலிருக்கும் எஞ்சிய நான்காயிரத்து 400 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக யாழ் பாதுகாப்புச் சேவைகள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்
.
கீரிமலை வீடமைப்புத்திட்டம் இம்மாத இறுதியில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
நேற்று (7) கீரிமலைக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்காக பாதுகாப்பு கட்டளையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க மேலும் தெரிவிக்கையில்
‘இராணுவத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் கீரிமலை வீடமைப்புத்திட்ட நிர்மாணப்பணிகள் தற்போது துரிதமாக இடம்பெற்றுவருகினறன
இந்தத் திட்டத்தின் கீழ் 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன, போர் அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இவை வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்காகவும் 43 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட ஏழாயிரம் ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நான்காயிரத்து 400 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்
2017ஆம் ஆண்டளவில் சகல நலன்புரி முகாம்களும் மூடப்படும். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எல்ரிரி அங்கத்தவர்கள் அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இது தேசிய நல்லிணக்கத்திற்கு உறுதுணையாக அமையும்’ என்றும் மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டார்.