Breaking
Wed. Dec 25th, 2024

மக்கா, மஸ்ஜிதுல் ஹரம் பகுதியில் கிரேன் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை  87 ஆக உயர்ந்துள்ளதாகவும்   காயமடைந்தோர் தொகை 183 ஆக உயர்வடைந்துள்ளதாக சவுதி அரேபிய  சிவில் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி நேரப்படி மாலை 5.45pm மணிக்கு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஹாஜிகள் பற்றி அறிவதற்காக முஸ்லிம் சமய விவாகார மற்றும் தபால் அமைச்சர் அல்ஹாஜ் அப்துல் ஹலீம் தற்போது ஜித்தா இலங்கை தூதுவர் காரியலத்துடனும் தற்போது அங்கு இருக்கும்  ஹஜ் கமிட்டி அங்கத்தவர் கலாநிதி ஸியாத் முஹம்மத் அவர்களுடனும் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். மற்றும் அங்கு ஏற்கனவே சென்றிருக்கும் முகவர்களுடனும் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

தற்போது கடும் மழை காரணமாகவும் ஹரம் ஷரீப் சுமார் 3 அடி வரை நீரில் மூழ்கி இருப்பதாலும் சில பகுதிகளில் மின்சாரம் தடை பட்டு இருப்பதாலும் சரியான நிலைமையை அறிவதற்கு சற்று நேரம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மழையுடன் கடும் புயல்  காற்று காரணமாக பாரம் தூக்கி (CRANE) ஒன்று விழுந்ததாகவும் அதன்போது கடும் நெரிசலிலும் சிக்கியதாலும் மரணங்கள் ஏற்பட்டதாக அறியப்படுகின்றது.சபா மர்வா கட்டிடத்தின் குறுக்கே இந்த பாரம் தூக்கி விழுந்ததாக அறியப்படுகிறது.

2C31A19600000578-3231117-High_winds_Extreme_weather_is_believed_to_have_been_the_cause_of-a-41_1441993106446 2C31E28800000578-3231117-image-m-63_1441995153455 2C31C20500000578-3231117-Horror_Rescue_workers_and_Muslims_who_have_journeyed_to_Mecca_fo-a-39_1441993106250 2C31949F00000578-3231117-At_least_62_people_were_killed_and_30_injured_when_a_crane_crash-a-37_1441993106102 2C31B11700000578-3231117-A_picture_captures_the_moment_that_the_fatal_crane_was_struck_by-a-42_1441993106448 2C31E25B00000578-3231117-image-m-58_1441994767683-600x450

Related Post