Breaking
Mon. Dec 23rd, 2024
பாகிஸ்தானில் இருந்து விடுதலை கேட்டு போராடி வரும் பலுசிஸ்தான் தலைவர்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   பலுசிஸ்தான் தலைவர்கள் முறைப்படி அரசியல் புகலிடம் கேட்டு விண்ணப்பித்தால் ஒரு சில வாரங்களில் அவர்களுக்கு முறைப்படி புகலிடம் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
பலுசிஸ்தானின் முதன்மை தலைவராக விளங்கும் பிரமாகத் புக்டி, இந்த முடிவை வரலாற்று சிறப்பு மிக்கது என்று வரவேற்றுள்ளார். கடைசியாக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய் லாமாவிற்கு இந்தியா அரசியல் புகலிடம் அளித்தது.
நாடு கடத்தப்பட்டதால் வெளிநாட்டில் உள்ள தன்னைப்போன்ற பலுசிஸ்தான் தலைவர்களுக்கு போதிய பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தால் கடும் நெருக்கடி உள்ளது. இந்த தலைவர்களுக்கு அரசியல் புகலிடம் அளித்தால், இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படும் இதன் மூலம் இவர்கள் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். விரைவில் புக்டி, ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அடைக்கலம் கோருவார் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக போராட்டக்குழு நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் புக்டி, உலகில் உள்ள பல நாடுகளுக்கு சென்று பலுசிஸ்தான் பிரச்னை குறித்து எடுத்துரைக்க எளிதாக அமையும் எனக்கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தினத்தின் போது பலுசிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசியது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது என்று தெரிவித்துள்ள புக்டி இதற்காக பிரதமருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

By

Related Post