Breaking
Fri. Nov 15th, 2024

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வொன்று,கடந்த 25 புத்தளம் அநுராதபுர வீதியில் அமைந்துள்ள, கால்டன் வீவ் ரிஷப்சன் மண்டபத்தில் நடைபெற்றது. 2017/2018 கல்வியாண்டுக்கான ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்குமான அறிமுக செயலமர்வாகவும், கௌரவிப்பு நிகழ்வாகவும் புத்தளம் மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படுள்ளது.

குறித்த நிகழ்வானது பல்கலைக்கழக சூழல் பற்றிய பூரண அறிவை மாணவர்களுக்கு வழங்கியதோடு, பல்கலைக்கழக ஆன்மீக விடயங்களைப் பேணுதல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக அமையப்பெற்றது. புத்தளம் மாவட்ட பட்டதாரி கற்கை மாணவர்கள் அமைப்பின் தலைவர் பாஸித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் மற்றும் அமைப்பாளரான ஆப்தீன் எஹியா முஹம்மத் ஆசீக் இப்லால், முன்னாள் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகம் தொடர்பான பல விடயங்களை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் விரிவுரையாளர் ரிபாஸ் வழங்கியதோடு, பல்கலைக்கழக  சூழலும் ஆன்மீகமும் எனும் தொனிப்பொருளில் அஷ்சேய்க் அப்துல் ஹமீத் நளீமி சிறப்புரையாற்றினார்.

Related Post