Breaking
Mon. Dec 23rd, 2024

பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொது உயர்தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் இவ் விண்ணப்ப படிவ கையேட்டினைப் பெற்று விண்ணப்பிக்க முடியும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்ப கையேட்டில் தேவையான தகவல்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஆண்டில் தகுதியான மாணவர்கள் பல்கலைக்கழக கல்விக்கு உள்ளீர்ப்பு செய்யப்படுவர்.

By

Related Post