புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
இதுகுறித்த விளம்பர அறிவித்தல் நாளை மற்றும் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.
கடந்த உயர் தர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
தொழிநுட்ப பிரிவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு இம்முறை 30 புதிய பாடவிதானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.