பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கல்வி வருடத்திற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான அனுமதி கையேடுகள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இம்முறை வழங்கப்படவுள்ள கையேடானது மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான விடயங்கள் நாளை முதல் பத்திரிகைகள் ஊடாக விளப்பரப்படுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.