பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியை நிறுத்துவதற்கு பல்கலைக்கழக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடந்தோறும் புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது முன்னைய அரசாங்கத்தின் கீழ் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தவகையில் கடந்தகாலங்களில் வருடந்தோறும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் இந்த பயிற்சிகளில் ஈடுபடுவது கட்டாயமானதாக இருந்ததோடு இவர்களுக்கான பயிற்சியானது இராணுவத்தினராலேயே வழங்கப்பட்டு வந்தது.
இவ்வாறான நிலையில் தேசிய அரசாங்கத்தின் கீழ் இதுவரை பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பயிற்சி நெறிக்குப்பதிலாக மாணவர்களின் சர்வதேச மொழித்திறனை மேம்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதுடன் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக மாண
வர்கள் சுதந்திரமாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்துவது புதிய அரசாங்கத்தின் நோக் கம் என அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.