Breaking
Sun. Dec 22nd, 2024

பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கை இம்முறை மேலதிகமாக 2208 பேரால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

குறித்த மேலதிக மாணவர் அனுமதியின்போது பொறியியல் மற்றும் உயிரியல் தொடர்பான கணித, விஞ்ஞானப் பிரிவுகளின் புதிய பாடநெறிகளுக்கு 1800 வரையான மேலதிக மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதன் பிரகாரம் இம்முறை மொத்தமாக 27603 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலதிகமாக அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான புதிய பாடநெறிகள் களனி, ஸ்ரீஜெயவர்த்தனபுர, சப்ரகமுவ, ருஹுணை பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.tw

By

Related Post