Breaking
Sat. Dec 28th, 2024

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட் 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்னைகள் தீரும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.

ரத்த சோகை, உடல் எடை சரியாகும். முகப்பொலிவு கூடும் சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது. தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவினால் தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும் பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். பீட்ரூட் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும். மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.

பீட்ரூட்டைக் கசாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும். பீட்ரூட்டில் 87.7 சதவீதம் நீச்சத்தும், 1.7 புரதச்சத்தும், 0.1 சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துக்களும், வைட்டமின் சி உள்ளன. வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்டுகள் உடலுக்குள் சென்றதும், நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்பட்டு, ரத்த குழாய்களை விரித்து ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்த அழுத்தம் குறைகிறது.

Related Post