வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பெறும் அறிவை நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயற்படுவதன் மூலம் புதிய தொழில் நுட்பத்திலான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா, இதன் மூலம் நாட்டின் மூலவளங்களை கொண்டு சிறந்த முடிவுப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் இதனை மையப்படுத்தியே அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் கூறினார்.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கூரை ஓடு தொழிற்சாலைகளின் பிரதி நிதிகள் 17 பேருக்கான வெளிநாட்டு ஊக்குவிப்பு பயணம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது அமைச்சரின் பிரதி நிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இர்ஷாத் றஹ்மத்துல்லா தமது உரையின் போது –
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் காணப்படும் பெறும் எண்ணிக்கையிலான நிறுவனங்களை இன்று இலாபம் ஈட்டும் நிறுவனமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மாற்றியுள்ளார். குறிப்பாக நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களை முகாமைத்துவம் செய்து அதனை நாட்டில் இன்று பேசப்படும் அளவுக்கு அதனை மேம்படுத்தியுள்ளார். அமைச்சரின் இந்த செயற்பாடுகளை தாங்கிக் கொள்ள முடியாதவர்களை அவரது பணிகளை முடக்க முயற்சிக்கின்றனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை பொறுத்த வரை இனவாதம், மதவாதம் அற்றவர். மக்களை நேசிக்கின்றவர், மக்களுக்கு உதவி செய்பவர். இது தான் அவரது குணாதிசயம்.இன்று அவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தபவர்கள் தொடர்பில் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இதற்காக நேரகாலத்தை செலவழிப்பது நாட்டுக்கு அவரின் மூலம் கிடைக்கும் பங்களிப்பின் பெறுமதியினை குறைக்கும் ஒன்றாகும்.
இன்று நீங்கள் மேற்கொள்ளும் பாரம்பரிய முறையிலான ஒட்டு தொழிற்துறையின் மூலம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது.இன்று 20 சதவீதமான உற்பத்திகளே எமது நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றது.புதிய தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதன் மூலம் அதனை 50 சதவீதமாக அதிகரிக்க முடியும்.இதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை எமது அமைச்சரின் நெறிப்படுத்தலில் பெற்றுக்கொடுக்க ஆயத்தமாகவுள்ளோம்.
குறிப்பாக உள்நாட்டில் வசதி படைத்தவர்கள் முதலீடுகளை செய்வதை வரவேற்கின்றோம்.இதன் மூலம் தொழில் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும்.ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீள புனரமைத்து தேவையான இயந்திரங்கைளை கொள்வனவு செய்து அதனை இயக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்த முயற்சிகளை இங்கிருக்கும் செரமிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நன்கு அறிவார்.என்றும் அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா இதன் போது கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் தாஹூதீன், சீதா செனவி ரத்ன,எம்அலாம், பணிப்பாளர் மெனிகே ஆகியோரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதுடன் அங்குள்ள நவீன தொழிற் நுட்பத்துடனான கூரை ஓட்டு உற்பத்திகளை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.